குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பின் அறிக்கை.


குப்பிழான் விக்கினேஸ்வரா வெளிநாட்டு அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டு இன்று மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் நிர்வாக தலைவராக திரு தி.பஞ்சாட்சரதேவன் அவர்கள் செயல்படுகிறார். இந்த அமைப்பானது கடந்த 3 வருடங்களாக நமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அந்த அமைப்பின் அறிக்கை பின்வருமாறு.

எமது அமைப்பை சேர்ந்த இராமுப்பிள்ளை சிவலிங்கம் அவர்களால் பாடசாலையின் கட்டிட நிதிக்காக 1300 சுவிஸ் பிராங்குகள் அனுப்பி வைக்கப்பட்டது.
எமது அமைப்பால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை உணவுத்திட்டதின் முதலாம் ஆண்டின் உணவு வழங்கலுக்கு சுவிஸ் அமைப்பாளர்களான முத்துச்சாமி கணேசலிங்கம், சுப்பிரமணியம் கிருஸ்ணதாஸ், தில்லையம்பலம் சசிகுமார் ஆகியோரால் 800 சுவிஸ் பிராங் வளங்கப்பட்டது. அதைவிட சுவிஸ், ஜேர்மன் போன்ற நாடுகளிலும் இருந்து நிதி பெறப்பட்டு அதைச் சிறப்பாக செயல்படுத்தி வந்தோம். அதன் பிறகு இந்த செயல்பாட்டை கடந்த இரு வருடங்களாக குப்பிழான் விக்கினேஸ்வரா கலைவாணி கலைமன்றம் கனடா, மொன்றியல் செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். இந்த உணவு வழங்கும் திட்டத்தை திரு வைரவநாதன் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதுவரைக்கும் பிறந்த நாள், நினைவுநாள், திருமணநாள், பூப்புனித நீராட்டு விழா போன்ற நாட்களில் மாணவர்களுக்கு பாயசம், வடையுடன் சிறந்த உணவுகள் பரிமாறப்பட்டன. அதற்கான அந்த நிதியை வளங்கியவர்களக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 10 குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு கோழி வளர்ப்பு சுய தொழிலை தொடங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். கோழிக் கூடு மற்றும் கோழி போன்றவற்றுக்கு தலா 25000 ரூபா தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை கிராமசேவகர் திரு சபேசன் மூலம் செய்ய உத்தேசித்துள்ளோம். இதற்கு நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் திரு சபேசன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள். அவரின் தொலைபேசி இலக்கம் - 0094776590417. அதே நேரம் எமது அமைப்பானது இரண்டு குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புக்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்


எமது அமைப்பின் புதிய உறுப்பினர்கள்
கனடா - இளைப்பாறிய ஆசிரியர் வை.மகாலிங்கம் 0016473406260
கனடா மொன்றியல் - செல்லையா குணபாலசிங்கம் 0015146846856
கனடா மொன்றியல் - பரமநாதன் குகானந்தன் 0015142768778
சுவிஸ் - உருத்திரகணேசலிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்) 0041765458203
சுவிஸ் - இராமுப்பிள்ளை சிவலிங்கம் (பாபு) 0041216344925
சுவிஸ் - தில்லையம்பலம் சசிகுமார் 0041216344925
சுவிஸ் - சுப்பிரமணியம் கிருஸ்ணதாஸ் 00414328800400
சுவிஸ் - தம்பிப்பிள்ளை சந்திரி 0041417105905
நோர்வே - செல்வராஜா பாலசுப்பிரமணியம் 004721649343
லண்டன் - வைத்திலிங்கம் ஜங்கரலிங்கம்
ஜரோப்பிய பொறுப்பாளர் - தி.பஞ்சாட்சரதேவன் 0049243170715